ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றியவாறே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இதுவரை மேடையேறியது 3500 முறைக்கும் மேல். அவற்றில், இவரே எழுதி, இயக்கி, நடித்தவை 6 - ஒவ்வொன்றும் 50 லிருந்து 70 முறை மேடையேறியவை.
நகைச்சுவை மேலோங்கி நிற்கும் பாத்திரங்களே இவர் விரும்பி ஏற்பது. மேடையிலேயே நேரடியாய் பாடி நடிப்பது இவரது தனிச்சிறப்பு.
பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்துமுள்ள இவர் இதுவரை கிட்டதட்ட 15 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்;
அவற்றில் இவரே எழுதி, இயக்கியவை 3; அவற்றிலும் இவருக்கு 'அடடே மனோகர்' என்ற செல்லப் பெயரை வாங்கித் தந்தது இவருடைய சிறந்த படைப்பான - தமிழ் பேசும் அனைவரையும் 1986 மற்றும் 1993ல் வாய்விட்டு சிரிக்க வைத்த - 'அடடே மனோகர்' தொடர்.
சுமார் 25 திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
9 வருடங்களுக்கு முன் தன் மனைவியை இழந்த இவருக்கு 3 பிள்ளைகள். தற்போது தன் 86 வயதான தாயாருடன் இவர் தனியே வசித்து வருகிறார்.
இவருக்கு மிகவும் பிடித்த இசை தென்னிந்திய கர்நாடக இசை ராகங்களில் இசை அமைக்கப்பட்டுள்ள அனைத்து திரை இசையும் மற்றும் சுத்தமான தென்னிந்திய கர்நாடக இசையும்.
ஓரளவு ராகங்களை கண்டுபிடித்து பாடவும் செய்வார். இவருக்கு ஓவியத்திலும் ஈடுபாடு உண்டு; ஓரளவு வரையவும் செய்வார். சுமாராக சமைப்பார்; அதை நன்றாக ருசித்து சாப்பிடுவார்!
ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
இவருக்கு பிடித்த தமிழ், ஆங்கில, இந்தி, வங்காள மற்றும் உலக திரைப்படங்கள் எண்ணிலடங்கா.
பிடித்த நடிக-நடிகைகளும் அவ்வாறே. தமிழில் அன்றைய ஏழிசை மன்னர் எம்..கே.டி. பாகவதரிலிருந்து இன்றைய தனுஷ் வரை, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்திற்கு பிடிக்கும். அம்மாதிரிதான், இந்தி, ஆங்கில மற்றும் மற்றைய மொழி திரைப்பட நடிக-நடிகையரும்.
சிறு வயது முதலே தத்துவத்தில் ஈடுபாடு உண்டு. ஆதலால், எண்ணற்ற தத்துவ புத்தகங்களான, பகவ்த் கீதை, உபநிஷத்துக்கள், த்ரிபுரா ரஹஸ்யம், விவேகசூடாமணி, குரான், பைபிள், போன்றவற்றை படிப்பது பிடிக்கும்.
தென்னிந்திய கர்னாடக இசையில் இவருக்கு இருப்பது வெறும் கேள்வி ஞானம்தான் – தன் தாயாருடன் சிறு வயது முதலே ஆயிரக் கணக்கான இசை மேதைகளின் இசைக் கச்சேரிகளை கேட்டு, ரசித்ததன் பயன்.
தமிழ் மொழியிலும் இவருக்கு பெரிய புலமை ஒன்றுமில்லை. இருந்தும், 1972ல் பல பக்திப் பாடல்களை ராக-தாளத்துடன் அந்த பேராற்றலின் கருணையினால் இயற்றிய இவர், 30 வருட இடைவெளிக்குப் பின் 2003-4 லில் நிறைய தத்துவ பாடல்களை ராக-தாளத்துடன் இயற்ற ஆரம்பித்து, அவற்றை “பரவசமாய்...” என்னும் தலைப்பில் புத்தகமாகவும், தானே பாடி குறுந்தகடாகவும் 2007ல் வெளியிட்டார். அவற்றைத்தான் இந்த வலைப்பகுதியில் காண்கிறீர்கள்/கேட்கிறீர்கள்.
1990 வரை , 70 கிலோ எடையேயிருந்த இவர், உடம்பில் ஏற்பட்ட ஒரு உபாதையினால் ஸ்டீராய்ட் ஊசி ஒன்றை மருத்துவர் போடப் போக, தற்போது இவரின் எடை 120 கிலோவை எட்டிவிட்டதால், பலவிதங்களில் மிகவும் சிரமப் படுகிறார்.
இருந்தும், அனைவரையும் சிரிக்க வைத்து தானும் சிரிப்பது இவருக்கு நிரம்பப் பிடிக்கும்.
புதன், 18 நவம்பர், 2009
அடடே மனோகர்
Posted by அடடே மனோகர் at 12:33 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
பரவசமாய்.....அழகாய் அமர்க்களமாய் இருக்கிறது.
sir,
excellent......
i am very happy to see you here
i just forwarded to all my friends...............
arun prasath.....
always with u
அழகாய் அமர்க்களமாய் இருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி சார் . தூர்தர்சனில் உங்கள் நாடகங்கள் பார்த்திருக்கிறேன் .
நான் ரசிக்கும் சில நல்ல நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர். நல்ல தகவல்கள். நன்றி.
அடடே! நீங்களும் வந்துட்டேளா இங்க.
பாத்தேன் பின்னிட்டேள்!
கர்நாடக இசைப்பரியரா நீங்க. வாங்க நம்ம வலைக்கு. நம்ம இளையராஜா
மாயாமாளவகெளள ராகத்தில் போட்ட
பாட்ட பதிவு செஞ்சுருக்கேன்.அப்பறம் கீரவாணி.
அடடே மனோகர் என்ற தொடரில்
"குட்டையை குழப்பினாறு
குட்டுப்பட்டு நின்னாரு
மட்டம் தட்டி பேசினாங்க ...
குரங்க பிடிக்க போயி
பிள்ளையாரா ஆன பின்பு
நல்லபடி புகழ்ந்தாங்க "
என்ற அழகான இசையுடன் கூடிய டைட்டில் பாடல் வரும் .நான் சிறு வயதில் மிகவும் ரசித்த தொலைக்காட்சியின் ஆரம்ப கால தொடர்களில் ஒன்று அது .
மிகவும் அருமை! எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறீர்கள்! ஒரு நடிகருக்குள் மறைந்திருக்கும் இறைமை (இயற்கை) பற்றிய உணர்வு உயிரோட்டமானது-ஆச்சரியமானதும் கூட! நிழல்களைத் தேடி ஓடுபவர்களுக்கு நடுவில் நிஜத்தை தரிசிக்க-தரிசித்த மனோகர்! அடடே!
முடியும் போது எனது வலைத் தளத்துக்கும் வந்து எனது சிசுக்களையும் கண்டு கொள்ளுங்கள்!
http://www.yozenbalki.blogspot.com and http://www.yozenmind.com
http://www.yozenbalkiyinkavidhaigal.blogspot.com
கருத்துரையிடுக