வியாழன், 5 நவம்பர், 2009

60 தனிமை தருவது திகட்டாத இனிமைதாளம் : ஆதி ராகம் : கரகரப்பிரியா

தனிமை தருவது திகட்டாத இனிமை
துணிந்ததை பழகிவிட்டால் மனதில் தங்குமே இளமை
... தனி

கனிவையும், பணிவையும் களிப்புடன் அளிக்குமது
முனிவரும் கூட உணர்ந்த முழு உண்மையிது
... தனி

புதையலைத் தேடி பொழுதை போக்காது
கதைகள் பல பேசி காலத்தை கடத்தாது
எதையும் அடைவதை இலக்காய் கொள்ளாது
சிதைக்கு போகும் உடலை சதமென நினையாதிருக்க உதவும்
... தனி

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்