வியாழன், 5 நவம்பர், 2009

38 காலம் வரும் போது அந்த காலன் வருவான்தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : சுபபந்துவராளி

காலம் வரும் போது அந்த காலன் வருவான்
காலன் அவன் வந்தால் நம் காலமும் முடியும்
... காலம்

ஞாலம் தோன்றிய நாள் முதலாக
காலம் தவறாமல் நடந்திடும் ஜாலமிது
... காலம்

சுற்றியுள்ளோர் தினம் தினம் சப்தமின்றி மறைவர்
முற்றிலும் அதை மறந்திவர் கோட்டைகள் கட்டுவார்
வெற்றியையே எதிலும் தேடி வெறியுடன் ஓடுவார்
பற்றின்றி வாழ மறந்து பட்டென்று இவரும் மறைவார்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்