திங்கள், 2 நவம்பர், 2009

58 பாடிப் பாடியே பரவசமாவேன்தாளம் : ஆதி ராகம் : பாகேஸ்ரீ

பாடிப்பாடியே பரவசமாவேன்
பாரினுள் உள்ள வரை நான்
... பாடி

ஆடிக்களிக்கச் செய்யும் அன்பொன்றே
தெய்வமென்று
கோடிக் கோடி மாந்தர் குறையின்றி
உணர்ந்திட
... பாடி

வாடிய பயிரைக் கண்டே வாடிடும் வள்ளளாரை
மூடிய விழிகளுடன் முறுவலிக்கும் புத்தரை
நாடிய வருக்கெல்லாம் நலமளிக்கும் நபிகளை
சூடிய முட்கிரீடமுடன் சுகமளிக்கும் ஏசுவையும்
... பாடி

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்