அடடே மனோகர்

வெள்ளி, 6 நவம்பர், 2009

92 ஓடும் நதி நானே...





இராகம்: நாட்டக்குறிஞ்சி (பாடல்:எ) தாளம்: ஆதி


ஓடும் நதி நானே; ஓரமுள்ள கரைகள் நானே;
ஓடமும் நானே; ஓடக்காரனும் நானே (ஓடும்)

பாடுவது நானே; பாடலைக் கேட்பதும் நானே;
பாடலும் நானே; பாவமும் நானே (ஓடும்)

மதியும் நானே; மார்க்கமும் நானே;
விதியும் நானே; விடையும் நானே;
துதியும் நானே; துதிப்பதும் நானே;
ஆதியும் நானே; அந்தமும் நானே. (ஓடும்)

சுகமும் நானே; சோகமும் நானே;
அகமும் நானே; அண்டமும் நானே;
வேகமும் நானே; விவேகமும் நானே;
சகலமும் நானே; சலிப்பெல்லாம் வீணே


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்