அடடே மனோகர்

வியாழன், 5 நவம்பர், 2009

(41) இத்தரை மீது எது வந்தாலும்



தாளம்: ஆதி
ராகம் :தெம்மாங்கு

இத்தரை மீது எது வந்தாலும்
சிரிச்சிகிட்டேயிருப்போம் – நாம்ப
சிரிச்சிகிட்டேயிருப்போம்

பத்தியங்கள் ஏதும் சத்தியமாயில்லை
பளிச்சின்னு சிரிச்சிருக்க
சித்திரை வெய்யிலிலும் சிரிப்போம் நாம்ப
மார்கழி குளிரிலும் சிரிப்போம் (இத்தரை)

புத்தன், ஏசு போன்ற புண்ணிய
புருஷங்க சிரிச்சதும் சிரிப்புதான்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொண்ணு
செஞ்ச கிழவர் சிரிச்சதும் சிரிப்புதான்
முத்து முத்தா வியர்வை உடலெங்கும் பூக்க
உழைக்கும் போதும் சிரிப்போம்
வைத்தியரும் வியாதியும் விலகி ஓடணும்னா
விலா நோக சிரிப்போம் (இத்தரை)

பணமும் பதவியும் வேணாம்
பதவிசாக சிரிக்க
கனமில்லாத மனம் ஒண்ணு போதும்
கலகலன்னு சிரிக்க
சினம் சிதைய சிரிப்போம்
சிந்தனை சிறக்க சிரிப்போம்
குணம் கூட சிரிப்போம்; நம்
குறைகள் குறைய சிரிப்போம் (இத்தரை)

சுளிக்காத முகமும் சலிக்காத மனமும்
வலிக்காத உடலும் வேணுமா
களிப்போம், ரசிப்போம், மகிழ்வோம்.
சிரிப்போம் சிரிச்சிகிட்டேயிருப்போம்,
நாம்ப சிரிச்சிகிட்டேயிருப்போம்
நாம்ப சிரிச்சிகிட்டேயிருப்போம்.


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்