வியாழன், 5 நவம்பர், 2009

32 சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னைதாளம் : ஆதி ராகம் : காம்போதி

சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னை
சுகமளித்து காத்திடுவாய் நீ என்னை
... சக

இகத்திலுள்ள இன்பங்கள் துன்பத்தில்தான் முடியும்
அகமெலாம் நீ நிறைந்தாலே எனக்கு விடியும்; அதனால்
... சக

வாழ்விது மாயம்; நடப்பதெல்லாம் நாடகம்;
தாழ்வது வரும் போது மட்டும் இது என் தாரகம்
வாழ்வது வந்துவிட்டால் வெளுத்துவிடும் சாயம்
வீழ்ந்து கிடப்பதே நான் உய்வதற்கு உபாயம்!
... சக

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.