இவருக்கு மிகவும் பிடித்த இசை தென்னிந்திய கர்நாடக இசை ராகங்களில் இசை அமைக்கப்பட்டுள்ள அனைத்து திரை இசையும் மற்றும் சுத்தமான தென்னிந்திய கர்நாடக
இசையும். ஓரளவு ராகங்களை கண்டுபிடித்து பாடவும் செய்வார். இவருக்கு ஓவியத்திலும் ஈடுபாடு உண்டு; ஓரளவு வரையவும் செய்வார். சுமாராக சமைப்பார்; அதை நன்றாக ருசித்து சாப்பிடுவார்! ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவருக்கு பிடித்த தமிழ், ஆங்கில, இந்தி, வங்காள மற்றும் உலக திரைப்படங்கள் எண்ணிலடங்கா. பிடித்த நடிக-நடிகைகளும் அவ்வாறே. தமிழில் அன்றைய ஏழிசை மன்னர் எம்..கே.டி. பாகவதரிலிருந்து இன்றைய தனுஷ் வரை, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்திற்கு பிடிக்கும். அம்மாதிரிதான், இந்தி, ஆங்கில மற்றும் மற்றைய மொழி திரைப்பட நடிக-நடிகையரும். சிறு வயது முதலே தத்துவத்தில் ஈடுபாடு உண்டு. ஆதலால், எண்ணற்ற தத்துவ புத்தகங்களான, பகவ்த் கீதை, உபநிஷத்துக்கள், த்ரிபுரா ரஹஸ்யம், விவேகசூடாமணி,
குரான், பைபிள், போன்றவற்றை படிப்பது பிடிக்கும். 1990 வரை , 70 கிலோ எடையேயிருந்த இவர், உடம்பில் ஏற்பட்ட ஒரு உபாதையினால் ஸ்டீராய்ட் ஊசி ஒன்றை மருத்துவர் போடப் போக, தற்போது இவரின் எடை 120 கிலோவை
எட்டிவிட்டதால், பலவிதங்களில் மிகவும் சிரமப் படுகிறார். இருந்தும், அனைவரையும் சிரிக்க வைத்து தானும் சிரிப்பது இவருக்கு நிரம்பப் பிடிக்கும்.
0 comments:
கருத்துரையிடுக