அடடே மனோகர்

வியாழன், 5 நவம்பர், 2009

16 நானெனும் அகந்தையை நழுவவிட்டால்



தாளம் : ஆதி ராகம் : மாண்டு

நானெனும் அகந்தையை நழுவவிட்டால் எந்த
நாடும் வீடாகும்; இங்கு யாவரும் உறவாவர்;
தானாகி நிற்பதற்கு இருக்கும் தடைகள்
தவிடு பொடியாகும்: தன்னாலே
தவிடு பொடியாகும் : அதனால்
... நானெனும்

நாடுகள், மதங்கள், சமயங்கள், இனங்கள்,
மொழிகள், சாதிகள், வகுப்புகள், மாநிலங்கள்,
மொழிகள், சாதிகள், வகுப்புகள், மாநிலங்கள்,
பாடுபட்டு மனிதன் இவற்றைப் படைத்தான்;
பாதையை அடைது விட்டான்; அன்பிற்கான
பாதையை அடைது விட்டான்: அதனால்
... நானெனும்

மாடி மேல் மாடி கட்டி கோடி கோடி புதைத்து
மறைந்திடுவார் ஒரு நாள்; அவர்
மறைந்திடுவார் ஒரு நாள்;
வாடியவரைக் கண்டு, வாடி, வருந்தி
வயிற்றுக்கு ஈயமாட்டார்; மனமுவந்து
வயிற்றுக்கு ஈயமாட்டார் அதனால்
... நானெனும்

பட்டங்கள் பல வாங்கி பதவியிலமர்ந்து
பெருமைகள் சேர்த்துக் கொள்வார் தமக்கவர்
பொருள்களும் சேர்த்துக் கொள்வார்;
திட்டப்படி நகர்ந்தால் திமிராய் நடப்பார்;
தலைகீழானால் தெய்வத்தைப் பழிப்பார்;
தலைகீழானால் தெய்வத்தைப் பழிப்பார்!
... நானெனும்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்