வியாழன், 5 நவம்பர், 2009

80 கனவில் காணும் காட்சிதாளம் : ரூபகம் ராகம் : ஆபோகி

கனவில் காணும் காட்சி நிஜம் போல்
கருத்தை மயக்குமே நம்
... கன

நனவில் நடக்கும் நிகழ்ச்சி யாவும்
நினைவிற் கொள்வோம் அது போலென்று
... கன

காணும் போது கனவை நனவென்றே
நாம் மிக நம்புவோம்
ஊனும் உயிருமாய் நிகழ்வதை
கனவென்றால் வெம்புவோம்
வானும் மண்ணும் உள்ளளவும்
வழி வழியாய் இது தொடரும்
நானும் அதுவும் ஒன்றென்ற ஞானம்
வாய்த்தாலே கதை முடியும்
... கன

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்