வியாழன், 5 நவம்பர், 2009

36 மண்ணை,பெண்ணை, பொன்னை விரும்பும்தாளம் : கண்டசாபு ராகம் : சிவரஞ்சனி

மண்ணை,பெண்ணை, பொன்னை விரும்பும்
மானுடரே கேளுங்கள்
கண்ணை மூடி திறப்பதற்குள் காணோம்
சில லட்சம் பேர்கள்
... மண்ணை

பண்ணைத் தோட்டமும், வீடுகளும்
பாங்குடன் கட்டி அனுபவிப்பீர்
எண்ணை தீர்ந்து அணையும் விளக்கை
எள்ளளவும் எண்ணமாட்டீர்
... மண்ணை

லட்சியங்கள் நோக்கி நாம் நடை ஏதும் பயில வேண்டாம்
லட்சங்களை லட்சியம் நாம் லவலேசமும் செய்ய வேண்டாம்
பட்சமுடன் நாமிங்கே பசித்தவரை புசிக்க வைப்போம்
இட்சணமே சத்தியமென இகமீது வாழ்ந்திருப்போம்!
... மண்ணை

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்