அடடே மனோகர்

செவ்வாய், 10 நவம்பர், 2009

அனைத்து ஆன்மீகப் பாடல்களும்....

  • Background Music Conceived. Conducted & Recorded by N. K. Shiv Kumar
    mobile: 94449-56471

  • பாடல்களின் இசை, இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு: N. K. ஷிவ் குமார்
    அலைபேசி: 94449-56471

  • உருவாக்கம், குரல்: அடடே மனோகர்

    ஆன்மீகப் பாடல்களின் முன்னுரை

    இந்தப் உரையை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    (01) ஒன்றுதான் அனைத்துமாச்சு

    தாளம்: ஆதி ராகம்: குந்தளவராளி

    ஒன்றுதான் அனைத்துமாச்சு.
    என்ற ஞானம் வந்தாச்சு
    இன்றுதான் புதிதாய் நான்
    பிறந்தாற்போல் ஆச்சு

    நின்று நிதானமாய்
    வாழ்க்கையை இனி ரசிப்பேன்
    என்று வந்தாலும் அந்த
    மரணத்தையும் ருசிப்பேன்

    (ஒன்றுதான்)

    ஆதியும் நானும்
    ஒன்றென உணர்ந்த அன்றே
    வீதியும் போதியும்
    எனக்காயிற்றொன்றே...

    பாதி மனதுடன்
    விடுவதற்கொன்றுமில்லை
    மோதி விழுந்து
    அடையவும் ஏதுமில்லை

    (ஒன்றுதான்)

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (2) நான் யார், நான் யார் என்று நீ யோசி

    தாளம் : ஆதி ராகம் : திலங்

    நான் யார் நான் யார் என்று நீ யோசி
    நாட்களை கடத்தாதே வீணாக பேசி சதா
    ... நான்

    நானெனும் நினைவே முதலில் எழுவதால்
    நானே அனைத்திற்கும் மூலமென்றறிவாய்
    ... நான்

    இது என் உடலென்போம்; அதனால் உடல் நானில்லை
    இது என் மனமென்போம்; அதனால் மனமும் நானில்லை
    எது ஒன்று இவையாவும் நானில்லை என்றதோ
    அதுவே அதுவாம், அனைத்துமாம்; அதனால்
    ... நான்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (3) பாடிப் பாடியே பரவசமாவேன்

    தாளம் : ஆதி ராகம் : பாகேஸ்ரீ

    பாடிப்பாடியே பரவசமாவேன்
    பாரினுள் உள்ள வரை நான்
    ... பாடி

    ஆடிக்களிக்கச் செய்யும் அன்பொன்றே
    தெய்வமென்று
    கோடிக் கோடி மாந்தர் குறையின்றி
    உணர்ந்திட
    ... பாடி

    வாடிய பயிரைக் கண்டே வாடிடும் வள்ளளாரை
    மூடிய விழிகளுடன் முறுவலிக்கும் புத்தரை
    நாடிய வருக்கெல்லாம் நலமளிக்கும் நபிகளை
    சூடிய முட்கிரீடமுடன் சுகமளிக்கும் ஏசுவையும்
    ... பாடி

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (4) ஒன்றே ஒன்றுதான் பலவானது......

    தாளம் : ஆதி ராகம் : தேஷ்

    ஒன்றே ஒன்றுதான் பலவானது; அந்த
    ஒன்றேதான் உன்னுள்ளே உயிரறிவானது
    ... ஒன்ற

    சென்றதை நினையாதே; வருவதை எண்ணாதே;
    இன்றைய பொழுதை நீ இனிதாக்க மறவாதே
    ... ஒன்றே

    கடவுளை மறந்து நீ கடமையில் மூழ்காதே
    கடமையைத் துறந்தும் நீ கடவுளைத் தேடாதே
    இடமும் வலமுமின்றி நடுநிலையில் நின்று
    சுடச்சுட வாழ்வதனை சுவைத்திடு நன்று
    ... ஒன்றே

    ராகம் : சஹான

    சிதைக்கு போகும் உடலை சதமென நினையாதே
    கதைகள் பல பேசி காலத்தை கடத்தாதே
    விதைத்ததே விளையுமென்ற விதியை நீ மறவாதே
    எதையுமே யாரையுமே இகழ்ந்து நீ பேசாதே
    ... ஒன்றே

    ராகம் : சாரங்கா

    கற்பித உலகமிதை கனவாய் கருதிடுவாய்
    அற்ப போகங்களை அளவாய் அனுபவிப்பாய்
    பற்பல நூல்களை நீ படித்தாலும் குழம்பாமல்
    நற்பணிகளில் மூழ்கி நலம் பல செய்திடுவாய்
    ... ஒன்றே

    ராகம் : ஹூசேனி

    வீடும் நாடும் மாயை; விதியும் மதியும் மாயை;
    மாடு மனை மாயை; மக்கள் சுற்றமும் மாயை;
    பாடும் நானும் மாயை; கேட்கும் நீயும் மாயை;
    காடு அழைக்கும் போது வரும் காலனும் கூட மாயை
    ... ஒன்றே

    ராகம் : வராளி

    உடலும் நீயில்லை; உள்ளமும் நீயில்லை;
    உடமைகளும் நீயில்லை; உயிரறிவே நீயென்று
    திடமாய் நீ உன்னுள் தெளிவாய் உணர்ந்த கணமே
    அடக்கத்தின் மறுவுருவாய் அமைதியாவாய் திண்ணமே
    ... ஒன்றே

    ராகம் : மத்யமாவதி

    வெட்டவெளியொன்றே அனைத்து மாயிற்றென்றே
    திட்டவட்டமாய் நாம் தெளிந்தபின் இன்றே
    கெட்ட சாதி, சமய, சடங்குகளை மறப்போம்
    வெட்ட வெளி தனிலே நம்மை நாம் இழப்போம்
    நம்மை நாம் இழப்போம், நம்மை நாம் இழப்போம்!
    ... ஒன்றே

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (05) எங்குமே அன்பு பொங்க வேண்டும்

    தாளம் : ஆதி ராகம் : சுருட்டி

    எங்குமே அன்பு பொங்க வேண்டும்; நம்
    சங்கடங்கள் அனைத்தும் தீர வேண்டும்
    ... எங்குமே

    திங்கள் மும்மாரி பெய்ய வேண்டும் அதன் விளைவாய்
    திக்கெட்டும் பஞ்சம் பஞ்சாய் பறக்க வேண்டும்
    ... எங்குமே

    சாதி, சமய, மத போர்களெல்லாம் ஓய்ந்து
    பீதியின்றி மக்கள் வாழ வேண்டும்;
    ஆதியில் இல்லாத தீவிரவாதமும் தீண்டாமையும்
    ஒழிய வேண்டும்; வேறென்ன வேண்டும்
    ... எங்குமே

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (06) சாந்தமே இல்லையென்றால்

    தாளம் : ஆதி ராகம் : சாமா

    சாந்தமே இல்லையென்றால் சாந்தியே வாழ்வில் இல்லை
    சந்ததமும் இதை சிந்தித்தால் இல்லையே தொல்லை
    ... சாந்

    காந்தம் போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன் பக்கம்
    மாந்தரை தெய்வமாக்கும் மகிமையும் அதனுள் அடக்கம்
    ... சாந்

    நிலையில்லா இவ்வாழ்வை நிலையான தென்று நம்பி
    அலையும் மனங்கொண்டு ஆசையினால் மிக வெம்பி
    கலைந்திடும் கனவுகண்டு காலமும் மனம் குழம்பி
    விலைமதிப்பில்லா வாழ்வு வீணாகாதிருக்க உதவும்
    ... சாந்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (07) நாடகமே உலகம்

    தாளம் : ஆதி ராகம் : காப்பி

    நாடகமே உலகம் நானொரு நடிகன் அதிலே
    நாமிதை நினைவில் கொண்டால் துன்பமெங்கே எதிலே
    ... நாட

    ஆடவந்த நமது ஆட்டமது இனித்திடுமே
    ஆட்டுபவன் - அனைத்தையும் ஆட்டுபவன்
    ஆடுபவன் - அனைத்திலும் ஆடுபவன் ஆட்டுபவன் -
    அவனை நாம் போற்றித் துதித்திடவே
    ... நாட

    கோடி கோடி காலமாயிருந்திடும் உலகமிது
    ஆடிப்பாடி அடங்கிடும் நம் வாழ்க்கையோ மிகச் சிறிது
    நாடியடங்கு முன்னர் நாம் இவ்வுண்மை தெளிந்து
    ஓடி ஓடி களைத்திடாமல் ஒடுங்குவோம் மனம் குவிந்து
    ... நாட

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (08) ஆவதொன்றுமில்லை அறி மனமே

    தாளம் : ஆதி ராகம் : பேஹாக்

    ஆவதொன்றுமில்லை அறி மனமே அதனால்
    சாவது பற்றிய சஞ்சலம் ஏன் தினமே? நம்மால்
    ... ஆவ

    நோவது பிறரை வீண் செயலாகும்
    போவதும் வருவதும் (உறவுகள் உடமைகள்)
    அது நினைத்தாலே ஆகும் நம்மால்
    ... ஆவ

    சாத்திரமேதும் சத்தியமாய் தெரியவேண்டாம்
    தோத்திரமேதும் துளியும் செபிக்க வேண்டாம்
    சூத்திரதாரி அதுவே சகலமென சரணடைவோம்
    பாத்திரம் உணர்ந்து (நமக்களிக்கப்பட்ட)
    பாடியாடி முடிப்போம்.
    ... ஆவ

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (09) நடப்பதனைத்தும் நாயகன் செயலாம்

    தாளம் : ரூபகம் ராகம் : பிலஹரி

    நடப்பதனைத்தும் நாயகன் செயலாம் இங்கு (இதை)
    நம்பினால் வாழ்க்கை ஆனந்த மயமாம்
    ... நட

    மடத்தனமே நான், எனது எண்ணங்கள்
    அடக்கமளிக்கும் வாழ்விற்கு பல வண்ணங்கள்
    ... நட

    குறைகள் உண்டு கோடி கோடி நம்மிடம், அதை
    நிறைகளாக்கும் பொறுப்பை விடுவோம் அதனிடம்
    அறையிலுள்ள - மன அறையிலுள்ள - இருளை நாமே அகற்ற எண்ணாது
    முறையாய் அதை சரணடைந்தால் மனம் ஒளிரும் சொல்லாது
    ... நட

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (10) பிறந்து, இருந்து, இறந்து போகும்

    தாளம் : கண்டசாபு ராகம் : கமாஸ்

    பிறந்து, இருந்து, இறந்து போகும்
    பேதை மனிதர் நாம் உலகில்
    ... பிற

    மறந்தும் இதை மறந்திடாமல்
    திறந்த மனதுடன் சிறந்து வாழ்வோம்
    ... பிற

    முக்தியடைய மார்க்கம் தேடி நாட்கள் கடத்துவார்
    யுக்தி அதற்கென்று எதைச் சொன்னாலும் யாரையும் நம்புவார்
    பக்தி, கர்ம, ராஜ, ஞான யோகம் யாவும் வீணே
    சக்தி தனியே நமக்கில்லை தெளிந்தால் முக்தி தானே
    ... பிற

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (11) கனவில் காணும் காட்சி

    தாளம் : ரூபகம் ராகம் : ஆபோகி

    கனவில் காணும் காட்சி நிஜம் போல்
    கருத்தை மயக்குமே நம்
    ... கன

    நனவில் நடக்கும் நிகழ்ச்சி யாவும்
    நினைவிற் கொள்வோம் அது போலென்று
    ... கன

    காணும் போது கனவை நனவென்றே
    நாம் மிக நம்புவோம்
    ஊனும் உயிருமாய் நிகழ்வதை
    கனவென்றால் வெம்புவோம்
    வானும் மண்ணும் உள்ளளவும்
    வழி வழியாய் இது தொடரும்
    நானும் அதுவும் ஒன்றென்ற ஞானம்
    வாய்த்தாலே கதை முடியும்
    ... கன

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (12) நம் கையில் ஏதுமில்லை

    தாளம் : ஆதி ராகம் : கல்யாணி

    நம் கையில் ஏதுமில்லை நன்குணர்ந்தால் இல்லை தொல்லை
    நலமுடன் வாழ நல்வழி வேறில்லை
    ... நம்

    உம்மென்றில்லாம உணர்ச்சிவயப்படாமல்
    கம்மென்றிருப்பததன் கருணையினால் தானாகும்
    ... நம்

    மூவாசை துறப்பது நாம் முயன்றாலும் ஆகாது
    நாவாசை என்பதும் நம்மை விட்டு போகாது
    பேராசை எனும் பிணியில் பிடிபட்டு வேகாது
    நிராசை நிலை நாதன் நினைத்தாலன்றி வாய்க்காது
    ...நம்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (13) வறியவர்க்கு வழங்கி

    தாளம் : ஆதி ராகம் : தோடி

    வறியவர்க்கு வழங்கி வாடியவர்க்கு வாடி
    வாழ்ந்திடும் வாழ்வே வாழ்வு இவ்வுலகில்
    ... வறி

    சிறியோர் பெரியோரென்று சீர்தூக்கி பார்க்க வேண்டாம்
    உரியவருக்கெல்லாம் உதவ மறக்க வேண்டாம்
    ... வறி
    அரிய செயல் புரிந்து நாம் அனைவரையும் கவர வேண்டாம்.
    மரித்த பின்னும் நம் புகழ் நிலைத்திருக்க எண்ண வேண்டாம்.
    சிரித்த முகத்துடனே - சதா சதா சதா சதா - சாதாரணனாய் வாழ்வோம்
    குறித்த நேரத்தில் அது (அனைத்துமான அது) அதனில் கரைந்து மறைந்திடுவோம்.
    ... வறி

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (14) அத்துவைதம், துவைதம்,

    தாளம் : ஆதி ராகம் : தர்பாரி கானடா

    அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்வைத மென்று
    தத்துவங்கள் எத்தனையோ இங்குண்டு குழப்பவென்று
    ... அத்

    அத்துனையும் படித்துப் பேசி பித்து பிடித்தலைய வேண்டாம்
    சத்துள்ள சாரைத் தள்ளி சக்கையை உண்ண வேண்டாம்
    ... அத்

    இங்கு நாமுள்ள காலம் மிகக் குறைவேயதனால்
    எங்குமுள்ள அதனை அதனருளால் நம்முள்ளே
    தங்கு தடையின்றி உணர்ந்து நாம் அதுவாவோம்
    பொங்கும் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வோம்!
    பகிர்ந்து கொள்வோம்!! பகிர்ந்து கொள்வோம்!!!
    ... அத்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (15) நான் ஒரு பூஜ்ஜியம்

    தாளம் : ஆதி ராகம் : துவிஜாவந்தி

    நான் ஒரு பூஜ்ஜியம்; இது உன் ராஜ்ஜியம்;
    நன்கிதைப் புரிந்து கொண்டேன்; நான் வேண்டேன் லட்சியம்
    ... நான்

    யான்விடும் மூச்சும் உனதருளாலே; நான்
    தானாகி உன்னில் கரைவதும் நீ நினைத்தாலே
    ... நான்

    உள்ளங்கை நெல்லி போல் விளங்கும் உண்மை இதை
    தெள்ளத் தெளிவாக்க எண்ணி பற்பல கற்பனைக் கதை
    கள்ளத்தனமாய் புகும் குழப்பங்கள் அறிந்தால் அதை
    மெள்ள அதனால் உணர்ந்தேன் தனிமையே இனிமைக்கு விதை
    ... நான்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (16) அனைத்தும் நீயே

    தாளம் : ஆதி ராகம் : பிருந்தாவன சாரங்கா

    அனைத்தும் நீயே! அனைத்திலும் நீயே!
    அறிந்த பின்னர் என்னுள் அமைதியே! அமைதியே!
    ... அனை

    வினைப்பயனாய் வரும் வெற்றி தோல்விகள்
    உனையே என்னுள் காண உருவான வேள்விகள்!
    ... அனை

    இன்றிருந்து நாளை போகப்போகும் நான்
    என்னுடையதென்று எதைச் சொல்ல? இங்கு
    என் பகைவரென்று யாரைக் காட்ட?
    அன்புமயமான இவ்வுலகில் எங்கும்
    இன்முகமே எனக்குத் தெரிகிறது! என்றும்
    இன்சொல்லே காதில் விழுகிறது! அனைத்தும்
    இன்பமயமாகவே இருக்கிறது! இருக்கிறது!!
    ... அனை

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (17) தியாகம் எதையும் புரிய வேண்டாம்

    தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : அமீர் கல்யாணி

    தியாகம் எதையும் புரிய வேண்டாம்.
    யாகம் எதுவும் வளர்க்க வேண்டாம்.
    தியானம் எதுவும் செய்ய வேண்டாம்
    திவ்ய தேசங்கள் செல்ல வேண்டாம்
    ... தியாகம்

    வியாழன் விரதம், வெள்ளி பூசை எதுவும் தேவையில்லை
    நியாயமாக வாழ்ந்தால் போதும் இல்லை யாருக்கும் தொல்லை
    ... தியாகம்

    துன்பம் என்று வருவோரின் துயரை உடனே துடைப்போம்
    இன்பம் அதில்தான் உள்ளதென்று புதிய வேதம் படைப்போம்
    முன்னம் வாழ்ந்து மறைந்தவர்கள் கோடி, கோடி, கோடி மக்கள்
    இன்று நாமும் அது போல்தான் புரிந்து கொண்டால் தீரும் சிக்கல்
    ... தியாகம்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (18) இருக்குமிடமே இனிய சொர்க்கம்

    தாளம் : கண்ட சாபு ராகம் : வசந்தா

    இருக்குமிடமே இனிய சொர்க்கம்
    இனி வேண்டாம் வீண் தர்க்கம்
    ... இரு

    வெறுத்து நீ எங்கும் செல்லாதே
    உறுத்தும் உன் மனம் அது பொல்லாதே
    ... இரு

    பிறக்கு முன்னர் இருந்த இடம்
    இதுவரையில் புரியவில்லை
    இறந்த பின்னர் செல்லுமிடமும்
    இதுவரையில் தெரியவில்லை
    மறந்தால் இவ்வாராய்ச்சியை
    மனக்குழப்பம் மறையுமே
    திறந்த மனதுடன் சிரித்து வாழ்ந்தால்
    தொல்லையாவும் தொலையுமே
    ... இரு

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (19) வாழ்க்கை என்பது வெறும் விளையாட்டு

    தாளம் : ஆதி ராகம் : நவரச கானடா

    வாழ்க்கை என்பது வெறும் விளையாட்டு; அதை
    வாழ்ந்திடுவோம் பாடி, தாளம் போட்டு
    ... வாழ்

    தாழ்ந்திடும் போதும் நாம் வாழ்ந்திடும் போதும்
    ஆழ்ந்ததை அனுபவித்தால் அப்போது
    ... வாழ்

    தனம் குவிப்பதையே தினம் தினம் செய்யாமல்
    சினமது கொள்ளாமல் சிந்தனை சிதறாமல்
    மனம் நினைப்பதைப் பேசி மதம் தலைக்கேறாமல்
    இனம், மொழி பேதங்கள் இனிதே கடந்தால்
    ... வாழ்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (20) நான் ஒன்றும் தனிப்பிறவியில்லை

    தாளம் : ஆதி ராகம் : ஹிந்தோளம்

    நான் ஒன்றும் தனிப்பிறவியில்லை; இதை
    நன்குணர்ந்தால் வாழ்வில் தொலைந்தது தொல்லை
    ... நான்

    நானிலத்தில் நான் ஒரு அபூர்வன் எனும் நினைப்பே
    யான், எனது மறைந்து தானாகி நிற்கத் தடையே
    ... நான்

    அனைத்திற்கும், அனைவர்க்கும் மூலம் ஒன்றே அதனால்
    பனையளவு சிறப்புகள் என்னிடம் இருந்துவிட்டால்
    திணையளவும் அதற்கு செருக்கடையாமல்
    வினைப்பயனாய் அமைந்த வாழ்வை வாழ்வேன் சளைக்காமல்
    ... நான்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (21) எங்கு நான் இருந்தாலும்

    தாளம் : ஆதி ராகம் : ஹம்ஸாநந்தி

    எங்கு நான் இருந்தாலும் என்ன நான் செய்தாலும்
    என் நினைவெல்லாம் நீயேயிருக்க வேண்டும்
    ... எங்கு

    அங்கிங்கெனாதபடி அனைத்துமாய் நிறைந்து
    எங்குமாய் விளங்கும் ஆதிமூலமே! அன்பே!
    ... எங்கு

    இருக்குமிடம் தேர்வு செய்யும் சுதந்திரம் எனக்கில்லை
    விரும்பிய தொழிலைச் செய்வதும் என் கைவசமில்லை
    வெறுப்பு விருப்பின்றி வந்து சேரும் பணி செய்ய
    ஒரு முனைப்பான கவனம் அருள்வாய் நான் உய்ய
    ... எங்கு

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (22) தனிமை தருவது திகட்டாத இனிமை

    தாளம் : ஆதி ராகம் : கரகரப்பிரியா

    தனிமை தருவது திகட்டாத இனிமை
    துணிந்ததை பழகிவிட்டால் மனதில் தங்குமே இளமை
    ... தனி

    கனிவையும், பணிவையும் களிப்புடன் அளிக்குமது
    முனிவரும் கூட உணர்ந்த முழு உண்மையிது
    ... தனி

    புதையலைத் தேடி பொழுதை போக்காது
    கதைகள் பல பேசி காலத்தை கடத்தாது
    எதையும் அடைவதை இலக்காய் கொள்ளாது
    சிதைக்கு போகும் உடலை சதமென நினையாதிருக்க உதவும்
    ... தனி

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (23) நம்மால்தான் முடியுமென்ற நினைப்பு

    தாளம் : ஆதி ராகம் : ஹம்ஸநாதம்

    நம்மால்தான் முடியுமென்ற நினைப்பு வெறும்
    நானெனும் செருக்கால் வரும் தவிப்பு;
    ... நம்

    சும்மாயிருந்தாலும் நடக்கும் காரியம் நாம்;
    ஆனாலது அம்மாதிரியிருக்க விடாது முடுக்கும்
    ... நம்

    பரமிடும் கட்டளையை மதித்து நாம்
    உரமிடுவோம் விதை விதைத்து
    சிரமம் பாராது நாம் உழைத்து; பின்
    வருவதை ஏற்போம் கரம் குவித்து!
    ... நம்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (24) குரு பெயர்ந்தாலென்ன?

    தாளம் : ஆதி ராகம் : சாவேரி

    குரு பெயர்ந்தாலென்ன? சனி பெயர்ந்தாலென்ன?
    கருவிலேயே அனைத்தும் முடிவானபின்னே
    ... குரு

    வருவது வரட்டுமே; போவது போகட்டுமே;
    தருவதும் பறிப்பதும் அதன் செயலான பின்னே
    ... குரு

    வாங்கிவிடும் மூச்சும் அதனருளாலே
    தூங்கி நாம் விழிப்பதும் அது நினைத்தாலே
    பாங்குடன் கோள்களை தாங்கி நிற்பததுவே
    ஓங்காரமதில் ஒடுங்க தருணம் இதுவே!
    ... குரு

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (25) சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னை

    தாளம் : ஆதி ராகம் : காம்போதி

    சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னை
    சுகமளித்து காத்திடுவாய் நீ என்னை
    ... சக

    இகத்திலுள்ள இன்பங்கள் துன்பத்தில்தான் முடியும்
    அகமெலாம் நீ நிறைந்தாலே எனக்கு விடியும்; அதனால்
    ... சக

    வாழ்விது மாயம்; நடப்பதெல்லாம் நாடகம்;
    தாழ்வது வரும் போது மட்டும் இது என் தாரகம்
    வாழ்வது வந்துவிட்டால் வெளுத்துவிடும் சாயம்
    வீழ்ந்து கிடப்பதே நான் உய்வதற்கு உபாயம்!
    ... சக

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (26) வானாகி, மண்ணாகி

    தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : ஆனந்தபைரவி

    வானாகி, மண்ணாகி, காற்றாகி, கனலாகி, நீராகிய பின்னே
    ஊனாகி உயிர்களாகி நின்றாய்; பின் மனமாகவும்
    மாற்றம் கொண்டாய்
    ... வா

    நானாகயிருக்கும் வரை நான் வேறு நீ வேறு
    தானாகிப் போவதுதான் கிடைத்தற்கரிய பேறு
    ... வா

    பொல்லாத உயிர்களும் புனிதமாய்த் தெரிய வேண்டும்
    இல்லாத பேர்களுக்கு இன்முகத்துடன் ஈய வேண்டும்
    கல்லாக உள்ள நெஞ்சம் கனிவாக குழைய வேண்டும்
    எல்லோரும், எல்லாமும் நீயாய் நான் காண வேண்டும்.
    ... வா

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (27) பூதங்கள் ஐந்தும்

    தாளம் : ஆதி ராகம் : செஞ்சுருட்டி

    பூதங்கள் ஐந்தும் தன் மாத்திரைகள் ஐந்துமாய்
    பேதங்களானது ஒன்றே ஒன்று
    ... பூதங்கள்

    சேதங்கள் ஏதுமின்றி உயிர்களிலே அது வாதங்கள்
    செய்யும் மனமாகவும் ஆனது
    ... பூதங்கள்

    கல்லுக்குள் உள்ள சிற்பம் கைத்திறனால் வெளிப்படலாம்.
    வில்லுக்குள் உள்ள அம்பு நாணேற்ற புறப்படலாம்.
    எள்ளுக்குள் எண்ணையாக பாலுக்குள் வெண்ணையாக
    உள்ளுக்குள் உறையுமதை அது நினைத்தாலே உணருவோம்!
    ... பூதங்கள்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (28) பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா

    தாளம் : ஆதி ராகம் : புன்னாகவராளி

    பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா; நாம்
    வீடு சேர வழி ஒன்றென்றே பாடு பாப்பா
    ... பாடு

    காடு மேடெல்லாம் களைத்துத் திரிய வேண்டாம்
    மாடு மக்கள் எதையும் வீணாய் பிரிய வேண்டாம்
    பாடு பட்டு பணத்தை பதுக்கவும் வேண்டாம், பின்
    கூடு விட்டு போகும் போது கூவியழவும் வேண்டாம்
    ... பாடு

    இல்லையென்போருக்கு நாம் இருப்பதை கொடுப்போம்
    தொல்லையில் உழல்வோரின் துயர்தனை துடைப்போம்
    எல்லையில்லா பிரபஞ்ச வெளிதனை நினைப்போம்
    சொல்லாமலே மனம் விரிவதை ரசிப்போம்
    ... பாடு

    எந்த நம்பிக்கையிலும் நம்மை நாம் இழக்காமல்
    வந்த வேலையை செய்வோம் மனம் சற்றும் சலிக்காமல்
    சொந்த லட்சியம் ஏதும் இல்லவே இல்லாமல்
    இந்த நிமிடம் மட்டும் முழுதுமாய் வாழ்ந்திடுவோம்.
    ... பாடு

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (29) காலம் வரும் போது அந்த காலன் வருவான்

    தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : சுபபந்துவராளி

    காலம் வரும் போது அந்த காலன் வருவான்
    காலன் அவன் வந்தால் நம் காலமும் முடியும்
    ... காலம்

    ஞாலம் தோன்றிய நாள் முதலாக
    காலம் தவறாமல் நடந்திடும் ஜாலமிது
    ... காலம்

    சுற்றியுள்ளோர் தினம் தினம் சப்தமின்றி மறைவர்
    முற்றிலும் அதை மறந்திவர் கோட்டைகள் கட்டுவார்
    வெற்றியையே எதிலும் தேடி வெறியுடன் ஓடுவார்
    பற்றின்றி வாழ மறந்து பட்டென்று இவரும் மறைவார்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (30) பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்

    தாளம் : ஆதி ராகம் : ரவிச்சந்திரிகா

    பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்
    நாடி அடங்கும் முன்னர் நன்மை பலவும் செய்வோம்
    ... பாடி

    கோடிப் பணத்தை சேர்க்கும் முயற்சிகள் எதுவும் வேண்டாம்
    வாடி, உதிரும் வாழ்க்கையிது யாரும் மறக்க வேண்டாம்
    ... பாடி

    திட்டம் பலவும் தீட்ட தினங்கள் மெள்ள நகரும்
    விட்டவற்றை பிடிக்க விடாமுயற்சிகளும் தொடரும்
    கிட்ட கிட்ட வரும் வெற்றி கைக்கு வந்தும் இடறும்
    எட்டயிருந்த எமபயம் எதிர்வந்து மெள்ள படரும்!
    ... பாடி

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (31) சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்

    தாளம் : ஆதி ராகம் : மோகனம்

    சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்
    சந்தை ஆரவாரத்தில் தன்னையே தொலைத்திடுவார் இவர்
    ... சிந்

    தந்தை, தாய், மனைவி, மக்கள், அடுத்தடுத்து மறைவர்
    கந்தையே ஆனாலுமதை கஞ்சனாய் கட்டித் திரிவார்
    ... சிந்

    நாடகம் முடிந்து திரை விழுந்த பின்னே
    ஆடவந்தோர், பார்க்க வந்தோர் அனைவரும் சென்ற பின்னே
    கூடவர யாருமின்றி, கூற்றுவன் வந்த பின்னே
    ஏடெடுத்து இவர் கணக்கு பார்க்கும் விந்தை என்னே!
    ... சிந்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (32) மண்ணை,பெண்ணை, பொன்னை விரும்பும்

    தாளம் : கண்டசாபு ராகம் : சிவரஞ்சனி

    மண்ணை,பெண்ணை, பொன்னை விரும்பும்
    மானுடரே கேளுங்கள்
    கண்ணை மூடி திறப்பதற்குள் காணோம்
    சில லட்சம் பேர்கள்
    ... மண்ணை

    பண்ணைத் தோட்டமும், வீடுகளும்
    பாங்குடன் கட்டி அனுபவிப்பீர்
    எண்ணை தீர்ந்து அணையும் விளக்கை
    எள்ளளவும் எண்ணமாட்டீர்
    ... மண்ணை

    லட்சியங்கள் நோக்கி நாம் நடை ஏதும் பயில வேண்டாம்
    லட்சங்களை லட்சியம் நாம் லவலேசமும் செய்ய வேண்டாம்
    பட்சமுடன் நாமிங்கே பசித்தவரை புசிக்க வைப்போம்
    இட்சணமே சத்தியமென இகமீது வாழ்ந்திருப்போம்!
    ... மண்ணை

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (33) நானெனும் அகந்தையை நழுவவிட்டால்

    தாளம் : ஆதி ராகம் : மாண்டு

    நானெனும் அகந்தையை நழுவவிட்டால் எந்த
    நாடும் வீடாகும்; இங்கு யாவரும் உறவாவர்;
    தானாகி நிற்பதற்கு இருக்கும் தடைகள்
    தவிடு பொடியாகும்: தன்னாலே
    தவிடு பொடியாகும் : அதனால்
    ... நானெனும்

    நாடுகள், மதங்கள், சமயங்கள், இனங்கள்,
    மொழிகள், சாதிகள், வகுப்புகள், மாநிலங்கள்,
    மொழிகள், சாதிகள், வகுப்புகள், மாநிலங்கள்,
    பாடுபட்டு மனிதன் இவற்றைப் படைத்தான்;
    பாதையை அடைது விட்டான்; அன்பிற்கான
    பாதையை அடைது விட்டான்: அதனால்
    ... நானெனும்

    மாடி மேல் மாடி கட்டி கோடி கோடி புதைத்து
    மறைந்திடுவார் ஒரு நாள்; அவர்
    மறைந்திடுவார் ஒரு நாள்;
    வாடியவரைக் கண்டு, வாடி, வருந்தி
    வயிற்றுக்கு ஈயமாட்டார்; மனமுவந்து
    வயிற்றுக்கு ஈயமாட்டார் அதனால்
    ... நானெனும்

    பட்டங்கள் பல வாங்கி பதவியிலமர்ந்து
    பெருமைகள் சேர்த்துக் கொள்வார் தமக்கவர்
    பொருள்களும் சேர்த்துக் கொள்வார்;
    திட்டப்படி நகர்ந்தால் திமிராய் நடப்பார்;
    தலைகீழானால் தெய்வத்தைப் பழிப்பார்;
    தலைகீழானால் தெய்வத்தைப் பழிப்பார்!
    ... நானெனும்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (34) ஞானம் வாய்ப்பது அரிதல்ல

    தாளம் : ரூபகம் ராகம் : ஹரிகாம்போதி

    ஞானம் வாய்ப்பது அரிதல்ல- பர
    ஞானம் வாய்ப்பது அரிதல்ல
    இன்றைக்கே, இப்பொழுதே, இக்கணமே வாய்த்திடும்
    ... ஞானம்

    மோன நிலையில் ஆனந்தமயமாய் மிளிரும்
    பேராற்றல் மனது வைத்தால் போதும்
    ... ஞானம்

    அறிய வேண்டியதுள்ளிருக்க வெறும்
    அறிவை பெருக்கல் ஞானமல்ல
    வறியவர்க்கு உதவி வருத்தம் போக்காது
    வானவர்க்கு செய்தல் ஞானமல்ல
    அரிய பொருளென்று மயங்கி உலகில்
    எதன் பின் ஓடுவதும் ஞானமல்ல
    உரிய நேரத்தில் செய்ய வேண்டியதை
    உதறித் தள்ளுவதும் ஞானமல்ல
    ... ஞானம்

    நிலையில்லா வாழ்விதென்று புரிந்து நம் மனம்
    நிலைக்கு வந்து விட்டால் அது ஞானம்
    கலைந்து போகும் கனவுகள், கற்பனைகள்
    கணிசமாய் குறைந்தால் அது ஞானம்
    மலைகள், அருவிகள் பார்த்து நம் மனம்
    மலைத்து நின்றாலும் அது ஞானம்
    அலையும் மனதையும் அதனருளாலே
    அனுபவித்தாலும் அது ஞானம்
    ... ஞானம்

    யாருக்கும், எப்பொழுதும், எதுவும் நடக்குமென்
    றோசனையிருந்தால் அது ஞானம்
    தேருக்கு அச்சாணி போலே யாருக்கும்
    தென்படாதிருந்தால் அது ஞானம்
    ஊருக்கு உபதேசிப்பதை தானும்
    உண்மையாய் பழகினால் அது ஞானம்
    பேருக்கு ஆசைப்படாது பிறர்க்கு
    பேருதவி புரிந்தால் அது ஞானம்
    ... ஞானம்

    அட்டமாசித்திகளும், முக்காலம் உணர்வதும்,
    அணிகலன் துறப்பதும் ஞானமல்ல
    இட்டமாக நாம் விட்ட முடியை
    மழிப்பதும் வளர்ப்பதும் ஞானமல்ல
    திட்டமெதுவும் தீட்டாமல் துணிந்து
    வருவதை ஏற்பதே ஞானம்
    குட்ட குட்ட பணிவாய் குனிந்து
    வெட்ட வெளிதனில் கலப்பதே ஞானம்!
    ... ஞானம்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (35) நிலையற்ற இவ்வுலகில்

    தாளம் : ஆதி ராகம் : கிளிக்கண்ணி

    நிலையற்ற இவ்வுலகில் நிச்சயம் இறப்பொன்றே
    என்பதை நான் மறந்தேன்; கிளியே!
    விலையற்றதை குவித்தேன்; விலைக்கு வாங்கி
    விலையற்றதை குவித்தேன்!

    வித வித சாத்திரங்கள் சொன்னபடி செய்து விட்டேன்
    வீட்டையும், பெயரையும் மாற்றினேன், கிளியே!
    விதியென்ற ஒன்றை மறந்தேன்; தலை
    விதியென்ற ஒன்றை மறந்தேன்!

    யோகம், யாகமும் செய்தேன்; கோவில்,
    குளங்கள் சென்றேன்;
    சோகங்கள் தீரவில்லை; கிளியே!
    மோகமும் தீரவில்லை எதிலுமுள்ள
    மோகமும் தீரவில்லை!

    இயற்கையாய் எழும் பசியை செயற்கையாய் அடக்காமல்
    இயல்பாக போக்கிக் கொள்வோம் கிளியே!
    ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்நம்மை நாமே
    ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்!

    பெண்களால் உருவாகி, பெண்களாலே உயர்ந்து
    பெண்களை தூற்ற வேண்டாம்; கிளியே!
    பெண்களை போற்றிடுவோம் ஞானமுடன்
    பெண்களை போற்றிடுவோம்!

    தத்துவங்கள் பேசித் தீர்த்தேன்; சித்துக்கள் பலவும் செய்தேன்
    பத்து கோடி பேர் புகழ்ந்தார், கிளியே!
    பித்தம் இன்னும் தெளியவில்லை நானெனும்
    பித்தம் இன்னும் தெளியவில்லை!

    வாங்கி விடும் மூச்சு சுழிமாறிப் போனால் போச்சு;
    ஓங்கி பேசி செய்த வாதங்கள் கிளியே!
    காற்றோடு போயாச்சு மூச்சு
    காற்றோடு போயாச்சு!

    கோடியில் நான் ஒருவன் எனும் நினைப்பே அனைத்து
    குழப்பத்திற்கும் காரணம் கிளியே!
    கோடியில் நானும் ஒருவன் என நினைப்போம்
    கோடியில் நானும் ஒருவன்!

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (36) ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் மூலம்

    தாளம் : ஆதி ராகம் : ஸ்ரீ ராகம்

    ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் மூலம்
    அறிந்து கொண்டாலே போதும் அமையுமே பொற்காலம்
    ... ஆசை
    பாசை மூடிய குளம் போல் ஆசை மூடிய மனம்
    காசையே நினைக்குமது பூசை செய்தாலும் தினம்
    ... ஆசை
    தடுக்கத் தடுக்க தொடர்ந்து வரும் கடலலைகள்
    எடுக்க எடுக்க ஏகமாய் வளரும் களைகள்
    ஒடுக்க ஒடுக்க ஓங்கியெழும் ஆசைகள்
    ஒடுங்க ஒடுங்க - ஓம்காரமதிலே -
    ஒடுங்க ஒடுங்க ஓயும் அதன் ஓசைகள்
    ... ஆசை

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (37) நாட்டை ஆண்டாலென்ன

    தாளம் : ஆதி ராகம் : பேகடா

    நாட்டை ஆண்டாலென்ன; கோட்டை பிடித்தாலென்ன
    காட்டை நோக்கிய பயணம் நம் வாழ்வு - சுடுகாட்டை
    ... நாட்
    ஓட்டை வீடு உடல் ஒன்பது வாசல் அதிலே
    பூட்டை பூட்டிய முதல்வன் சாவியை வைத்ததெதிலே
    ... நாட்
    புரியாத புதிர்கள் இப்புவியில் உண்டு கோடி கோடி
    சரியான விடையை அதற்கு சளைக்காமல் தேடித் தேடி
    அரிதான இப்பிறவி அழியுமே மெள்ள வாடி
    துரிதமாய் அதற்குள் வாழ்வை ரசித்து வாழ்வோம் ஆடிப்பாடி
    ... நாட்

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (38) நல்ல நாளென்று ஒரு நாள்

    தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : கல்யாண வசந்தம்

    நல்ல நாளென்று ஒரு நாள் தனியே
    இல்லை நாதன் படைப்பில்
    ... நல்ல
    வல்லவனுக்கு கேவலம் ஓர் புல்லும் ஆயுதமே
    நல்லவனுக்கிங்கே எல்லா நாட்களும் நல்ல நாட்களே
    ... நல்ல
    யார் நல்லவரென்றால் நான் நல்லவன் என்று
    மார்தட்டிக் கொள்ளாதோர் நல்லவரே
    பார் முழுதும் தன் நாடென்றும் வீடென்றும்
    கருதுவோர் யாவரும் நல்லவரே
    கார்மேகம் போல வாரி வழங்கும்
    கொடையில் சிறந்தோர் நல்லவரே
    சீர்தூக்கிப்பார்க்காது சகலரையும்
    சமமாய் நேசிப்போர் யாவரும் நல்லவரே!
    ... நல்ல

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (39) நடப்பது பற்றிய கவனமின்றி

    தாளம் : ஆதி ராகம் : ஜோன்புரி

    நடப்பது பற்றிய கவனமின்றி நாம்
    நடந்ததை நினைத்து மயங்குகின்றோம்; அன்றி
    நடக்குமென்று எண்ணி கலங்குகின்றோம் வாழ்வில்
    ... நட
    கிடப்பதும் நடப்பதும் கடவுள் அவன் அருளால்
    மடத்தனம் தன்னாலென மனிதன் நினைத்தால்
    ... நட
    உண்ணும் போது நாம் உண்ணுவதில்லை
    உறங்கும் போதும் நாம் உறங்குவதில்லை
    கண்ணும் கருத்தும் செய்யும் கருமத்தில் இல்லை
    கவனத்தில் இது இருந்தால் கனிவது இன்பத்தின் எல்லை
    ... நட

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (40) என்னில் நான் கரையும் நாள்

    தாளம் : மிஸ்ரசாபு
    ராகம் : முகாரி

    என்னில் நான் கரையும் நாள்
    எந்நாளோ அறியேன் இம்
    மண்ணில் வந்து பிறந்த
    மர்மமும் தெரியேன்
    (என்னில்)
    கண்ணில் தெரியும் அனைத்தும்
    கணத்தில் மறையும் மாயை
    எண்ணில் மாளாதிங்கு
    எட்டியோர் எமன் வாயை
    (என்னில்)
    எடைபோட்டு பார்த்த போது
    எண்ணியது நடந்ததில்லை
    படைத்தவன் கணக்கு பற்றி
    போதிய விளக்கமில்லை
    கிடைத்ததில் களிப்படைந்தால்
    கிஞ்சித்தும் இல்லை தொல்லை
    கடைவிரித்திதை கூறினாலும்
    கொள்ளுவார் எவருமில்லை
    (என்னில்)

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

    =============================================================

    (41) இத்தரை மீது எது வந்தாலும்

    தாளம்: ஆதி
    ராகம் :தெம்மாங்கு

    இத்தரை மீது எது வந்தாலும்
    சிரிச்சிகிட்டேயிருப்போம் – நாம்ப
    சிரிச்சிகிட்டேயிருப்போம்

    பத்தியங்கள் ஏதும் சத்தியமாயில்லை
    பளிச்சின்னு சிரிச்சிருக்க
    சித்திரை வெய்யிலிலும் சிரிப்போம் நாம்ப
    மார்கழி குளிரிலும் சிரிப்போம் (இத்தரை)

    புத்தன், ஏசு போன்ற புண்ணிய
    புருஷங்க சிரிச்சதும் சிரிப்புதான்
    கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொண்ணு
    செஞ்ச கிழவர் சிரிச்சதும் சிரிப்புதான்
    முத்து முத்தா வியர்வை உடலெங்கும் பூக்க
    உழைக்கும் போதும் சிரிப்போம்
    வைத்தியரும் வியாதியும் விலகி ஓடணும்னா
    விலா நோக சிரிப்போம் (இத்தரை)

    பணமும் பதவியும் வேணாம்
    பதவிசாக சிரிக்க
    கனமில்லாத மனம் ஒண்ணு போதும்
    கலகலன்னு சிரிக்க
    சினம் சிதைய சிரிப்போம்
    சிந்தனை சிறக்க சிரிப்போம்
    குணம் கூட சிரிப்போம்; நம்
    குறைகள் குறைய சிரிப்போம் (இத்தரை)

    சுளிக்காத முகமும் சலிக்காத மனமும்
    வலிக்காத உடலும் வேணுமா
    களிப்போம், ரசிப்போம், மகிழ்வோம்.
    சிரிப்போம் சிரிச்சிகிட்டேயிருப்போம்,
    நாம்ப சிரிச்சிகிட்டேயிருப்போம்
    நாம்ப சிரிச்சிகிட்டேயிருப்போம்.

    இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்