வியாழன், 5 நவம்பர், 2009

78 இருக்குமிடமே இனிய சொர்க்கம்தாளம் : கண்ட சாபு ராகம் : வசந்தா

இருக்குமிடமே இனிய சொர்க்கம்
இனி வேண்டாம் வீண் தர்க்கம்
... இரு

வெறுத்து நீ எங்கும் செல்லாதே
உறுத்தும் உன் மனம் அது பொல்லாதே
... இரு

பிறக்கு முன்னர் இருந்த இடம்
இதுவரையில் புரியவில்லை
இறந்த பின்னர் செல்லுமிடமும்
இதுவரையில் தெரியவில்லை
மறந்தால் இவ்வாராய்ச்சியை
மனக்குழப்பம் மறையுமே
திறந்த மனதுடன் சிரித்து வாழ்ந்தால்
தொல்லையாவும் தொலையுமே
... இரு

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்