வியாழன், 5 நவம்பர், 2009

50 அனைத்தும் நீயேதாளம் : ஆதி ராகம் : பிருந்தாவன சாரங்கா

அனைத்தும் நீயே! அனைத்திலும் நீயே!
அறிந்த பின்னர் என்னுள் அமைதியே! அமைதியே!
... அனை

வினைப்பயனாய் வரும் வெற்றி தோல்விகள்
உனையே என்னுள் காண உருவான வேள்விகள்!
... அனை

இன்றிருந்து நாளை போகப்போகும் நான்
என்னுடையதென்று எதைச் சொல்ல? இங்கு
என் பகைவரென்று யாரைக் காட்ட?
அன்புமயமான இவ்வுலகில் எங்கும்
இன்முகமே எனக்குத் தெரிகிறது! என்றும்
இன்சொல்லே காதில் விழுகிறது! அனைத்தும்
இன்பமயமாகவே இருக்கிறது! இருக்கிறது!!
... அனை

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்