வியாழன், 5 நவம்பர், 2009

56 சாந்தமே இல்லையென்றால்தாளம் : ஆதி ராகம் : சாமா

சாந்தமே இல்லையென்றால் சாந்தியே வாழ்வில் இல்லை
சந்ததமும் இதை சிந்தித்தால் இல்லையே தொல்லை
... சாந்

காந்தம் போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன் பக்கம்
மாந்தரை தெய்வமாக்கும் மகிமையும் அதனுள் அடக்கம்
... சாந்

நிலையில்லா இவ்வாழ்வை நிலையான தென்று நம்பி
அலையும் மனங்கொண்டு ஆசையினால் மிக வெம்பி
கலைந்திடும் கனவுகண்டு காலமும் மனம் குழம்பி
விலைமதிப்பில்லா வாழ்வு வீணாகாதிருக்க உதவும்
... சாந்


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்