அடடே மனோகர்

வியாழன், 5 நவம்பர், 2009

68 சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்



தாளம் : ஆதி ராகம் : மோகனம்

சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்
சந்தை ஆரவாரத்தில் தன்னையே தொலைத்திடுவார் இவர்
... சிந்

தந்தை, தாய், மனைவி, மக்கள், அடுத்தடுத்து மறைவர்
கந்தையே ஆனாலுமதை கஞ்சனாய் கட்டித் திரிவார்
... சிந்

நாடகம் முடிந்து திரை விழுந்த பின்னே
ஆடவந்தோர், பார்க்க வந்தோர் அனைவரும் சென்ற பின்னே
கூடவர யாருமின்றி, கூற்றுவன் வந்த பின்னே
ஏடெடுத்து இவர் கணக்கு பார்க்கும் விந்தை என்னே!
... சிந்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்