வியாழன், 5 நவம்பர், 2009

10 நான் ஒன்றும் தனிப்பிறவியில்லைதாளம் : ஆதி ராகம் : ஹிந்தோளம்

நான் ஒன்றும் தனிப்பிறவியில்லை; இதை
நன்குணர்ந்தால் வாழ்வில் தொலைந்தது தொல்லை
... நான்

நானிலத்தில் நான் ஒரு அபூர்வன் எனும் நினைப்பே
யான், எனது மறைந்து தானாகி நிற்கத் தடையே
... நான்

அனைத்திற்கும், அனைவர்க்கும் மூலம் ஒன்றே அதனால்
பனையளவு சிறப்புகள் என்னிடம் இருந்துவிட்டால்
திணையளவும் அதற்கு செருக்கடையாமல்
வினைப்பயனாய் அமைந்த வாழ்வை வாழ்வேன் சளைக்காமல்
... நான்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்