வியாழன், 5 நவம்பர், 2009

54 நடப்பதனைத்தும் நாயகன் செயலாம்தாளம் : ரூபகம் ராகம் : பிலஹரி

நடப்பதனைத்தும் நாயகன் செயலாம் இங்கு (இதை)
நம்பினால் வாழ்க்கை ஆனந்த மயமாம்
... நட

மடத்தனமே நான், எனது எண்ணங்கள்
அடக்கமளிக்கும் வாழ்விற்கு பல வண்ணங்கள்
... நட

குறைகள் உண்டு கோடி கோடி நம்மிடம், அதை
நிறைகளாக்கும் பொறுப்பை விடுவோம் அதனிடம்
அறையிலுள்ள - மன அறையிலுள்ள - இருளை நாமே அகற்ற எண்ணாது
முறையாய் அதை சரணடைந்தால் மனம் ஒளிரும் சொல்லாது
... நட

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்