தாளம் : ஆதி ராகம் : கிளிக்கண்ணி
நிலையற்ற இவ்வுலகில் நிச்சயம் இறப்பொன்றே
என்பதை நான் மறந்தேன்; கிளியே!
விலையற்றதை குவித்தேன்; விலைக்கு வாங்கி
விலையற்றதை குவித்தேன்!
வித வித சாத்திரங்கள் சொன்னபடி செய்து விட்டேன்
வீட்டையும், பெயரையும் மாற்றினேன், கிளியே!
விதியென்ற ஒன்றை மறந்தேன்; தலை
விதியென்ற ஒன்றை மறந்தேன்!
யோகம், யாகமும் செய்தேன்; கோவில்,
குளங்கள் சென்றேன்;
சோகங்கள் தீரவில்லை; கிளியே!
மோகமும் தீரவில்லை எதிலுமுள்ள
மோகமும் தீரவில்லை!
இயற்கையாய் எழும் பசியை செயற்கையாய் அடக்காமல்
இயல்பாக போக்கிக் கொள்வோம் கிளியே!
ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்!
பெண்களால் உருவாகி, பெண்களாலே உயர்ந்து
பெண்களை தூற்ற வேண்டாம்; கிளியே!
பெண்களை போற்றிடுவோம் ஞானமுடன்
பெண்களை போற்றிடுவோம்!
தத்துவங்கள் பேசித் தீர்த்தேன்; சித்துக்கள் பலவும் செய்தேன்
பத்து கோடி பேர் புகழ்ந்தார், கிளியே!
பித்தம் இன்னும் தெளியவில்லை நானெனும்
பித்தம் இன்னும் தெளியவில்லை!
வாங்கி விடும் மூச்சு சுழிமாறிப் போனால் போச்சு;
ஓங்கி பேசி செய்த வாதங்கள் கிளியே!
காற்றோடு போயாச்சு மூச்சு
காற்றோடு போயாச்சு!
கோடியில் நான் ஒருவன் எனும் நினைப்பே அனைத்து
குழப்பத்திற்கும் காரணம் கிளியே!
கோடியில் நானும் ஒருவன் என நினைப்போம்
கோடியில் நானும் ஒருவன்!
இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்
வியாழன், 5 நவம்பர், 2009
20 நிலையற்ற இவ்வுலகில்
Labels: அடடே மனோகரின் ஆன்மீகப் பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள்
Posted by அடடே மனோகர் at 4:01 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக