வியாழன், 5 நவம்பர், 2009

42 பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்தாளம் : ஆதி ராகம் : ரவிச்சந்திரிகா

பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்
நாடி அடங்கும் முன்னர் நன்மை பலவும் செய்வோம்
... பாடி

கோடிப் பணத்தை சேர்க்கும் முயற்சிகள் எதுவும் வேண்டாம்
வாடி, உதிரும் வாழ்க்கையிது யாரும் மறக்க வேண்டாம்
... பாடி

திட்டம் பலவும் தீட்ட தினங்கள் மெள்ள நகரும்
விட்டவற்றை பிடிக்க விடாமுயற்சிகளும் தொடரும்
கிட்ட கிட்ட வரும் வெற்றி கைக்கு வந்தும் இடறும்
எட்டயிருந்த எமபயம் எதிர்வந்து மெள்ள படரும்!
... பாடி

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்