தாளம் : மிஸ்ரசாபு
ராகம் : முகாரி
என்னில் நான் கரையும் நாள்
எந்நாளோ அறியேன் இம்
மண்ணில் வந்து பிறந்த
மர்மமும் தெரியேன்
(என்னில்)
கண்ணில் தெரியும் அனைத்தும்
கணத்தில் மறையும் மாயை
எண்ணில் மாளாதிங்கு
எட்டியோர் எமன் வாயை
(என்னில்)
எடைபோட்டு பார்த்த போது
எண்ணியது நடந்ததில்லை
படைத்தவன் கணக்கு பற்றி
போதிய விளக்கமில்லை
கிடைத்ததில் களிப்படைந்தால்
கிஞ்சித்தும் இல்லை தொல்லை
கடைவிரித்திதை கூறினாலும்
கொள்ளுவார் எவருமில்லை
(என்னில்)
இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்
வியாழன், 5 நவம்பர், 2009
88 என்னில் நான் கரையும் நாள்
Labels: அடடே மனோகரின் ஆன்மீகப் பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள்
Posted by அடடே மனோகர் at 4:17 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக