அடடே மனோகர்

ஞாயிறு, 1 நவம்பர், 2009

30 ஒன்றுதான் அனைத்துமாச்சு



உருவாக்கம், குரல்: அடடே மனோகர்



தாளம்: ஆதி ராகம்: குந்தளவராளி

ஒன்றுதான் அனைத்துமாச்சு.
என்ற ஞானம் வந்தாச்சு
இன்றுதான் புதிதாய் நான்
பிறந்தாற்போல் ஆச்சு

நின்று நிதானமாய்
வாழ்க்கையை இனி ரசிப்பேன்
என்று வந்தாலும் அந்த
மரணத்தையும் ருசிப்பேன்

(ஒன்றுதான்)

ஆதியும் நானும்
ஒன்றென உணர்ந்த அன்றே
வீதியும் போதியும்
எனக்காயிற்றொன்றே...

பாதி மனதுடன்
விடுவதற்கொன்றுமில்லை
மோதி விழுந்து
அடையவும் ஏதுமில்லை

(ஒன்றுதான்)



இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்