வியாழன், 5 நவம்பர், 2009

82 நான் ஒரு பூஜ்ஜியம்தாளம் : ஆதி ராகம் : துவிஜாவந்தி

நான் ஒரு பூஜ்ஜியம்; இது உன் ராஜ்ஜியம்;
நன்கிதைப் புரிந்து கொண்டேன்; நான் வேண்டேன் லட்சியம்
... நான்

யான்விடும் மூச்சும் உனதருளாலே; நான்
தானாகி உன்னில் கரைவதும் நீ நினைத்தாலே
... நான்

உள்ளங்கை நெல்லி போல் விளங்கும் உண்மை இதை
தெள்ளத் தெளிவாக்க எண்ணி பற்பல கற்பனைக் கதை
கள்ளத்தனமாய் புகும் குழப்பங்கள் அறிந்தால் அதை
மெள்ள அதனால் உணர்ந்தேன் தனிமையே இனிமைக்கு விதை
... நான்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்